பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலம் பகுதியில் உள்ள விமான பழுது பார்ப்பு நிலையத்தை ஏர் ஆபீசர் கமாண்டிங் தளபதி பார்வையிட்டார்

Posted On: 25 JUN 2024 1:13PM by PIB Chennai

பாலம் பகுதியில் உள்ள விமான பழுது பார்ப்பு நிலையத்தை ஏர் ஆபீசர் கமாண்டிங் தளபதி ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க் 2024 ஜனவரி 23-24 தேதிகளில் பார்வையிட்டார்.  விமானப்படை வீரர்கள், குடும்பத்தினர் நலச்சங்கத் தலைவர் திருமதி ரீட்டு கார்க் உடனிருந்தார்.

இந்த நிலையத்தில் ஏற்பட்டு வரும்  முன்னேற்றங்கள் குறித்தும், அமைதி மற்றும் போர்க்காலங்களில்  மேற்கொள்ளப்பட்ட  சாதனைக்கான  முன்முயற்சி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் ஏர் மார்ஷலுக்கு எடுத்துரைக்கப்பட்டது.   பழுது பார்ப்பு நிலைய ஊழியர்களிடையே பேசிய ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க், இதன் சிறப்பான பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்ததோடு இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார் நிலைக்கு பங்களிப்பு செய்த ஊழியர்களையும் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து பஞ்சவடியில் உள்ள விமானப்படை பள்ளியை பார்வையிட்ட ஏர் மார்ஷல், 2023-24-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளி விருதினை வழங்கினார்.

இந்தப் பயணத்தின் போது ஊழியர்களின் குடும்ப நல  செயல்பாடுகளில் கவனம் செலுத்திய திருமதி ரீட்டு கார்க், நிலைய ஊழியர்களின் மனைவியருடன் கலந்துரையாடினார்.  விமானப் பழுதுபார்ப்பு நிலைய ஊழியர்கள் குடும்பங்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கான பல்வேறு முன்முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.  விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் நலச்சங்கத்தால் நடத்தப்படும் முக்கியமான தொழிற்கூடங்களையும் அவர் பார்வையிட்டார்.

------

(Release ID: 2028456)

PLM/SMB/KPG/RR


(Release ID: 2028515) Visitor Counter : 97