ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான 'ஜல் சக்தி திட்டம்: மழை நீரை சேகரித்தல் – 2024' குறித்த பயிலரங்கம் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
24 JUN 2024 8:48PM by PIB Chennai
மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான 'ஜல் சக்தி திட்டம்: மழை நீரை சேகரித்தல் – 2024' குறித்த பயிலரங்கம் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சியை ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை, ஆகியவை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தன. இந்த அலுவலர்கள் 151 மாவட்டங்களுக்குச் சென்று இயக்கத்தைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட மத்தியக் குழு, ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இரண்டு முறை செல்லும். இந்தப் பிரச்சாரம் 09.03.2024 முதல் 30.11.2024 வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் (கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள்) 'மகளிர் சக்தி மூலம் நீர் சக்தி' என்ற கருப்பொருளுடன் நீர் சேமிப்பில் பெண்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பாட்டீல், ஒட்டுமொத்த நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிலையான காடு வளர்ப்பை செயல்படுத்துவதோடு குறைந்த கட்டணத்தில் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கோள் காட்டினார். ஜல் சக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட / செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் நீர்த் துறையில் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028385
***
PKV/BR/RR
(Release ID: 2028431)
Visitor Counter : 54