ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24 பருத்தி பருவத்திற்கான பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வு குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது

Posted On: 24 JUN 2024 7:36PM by PIB Chennai

2023-24 பருத்தி பருவத்திற்கான பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வு குழுவின் மூன்றாவது கூட்டம் 24.06.2024 அன்று இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஜவுளி ஆணையர் திருமதி ரூப் ராஷி தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசு, மாநில அரசு, ஜவுளித் தொழில், பருத்தி வர்த்தகத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பருத்தியின் பரப்பளவு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய பருத்தி சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜவுளி ஆணையர் திருமதி ரூப் ராஷி, தொழில்துறைக்கு போதுமான மூலப்பொருட்கள் கிடைக்கும் என்றார். பருத்தி நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டு இரண்டாவது அதிக நுகர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "தொழில்துறை, ஒரு நல்ல பாதையில் பயணிக்கிறது, மேலும் சிறந்த நுகர்வு புள்ளிவிவரங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்", என்று அவர் மேலும் கூறினார். இந்திய பருத்திக் கழகம் (சி.சி.ஐ) லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு லலித் குமார் குப்தா கூறுகையில், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த பருத்தியைப் பெற, ஒவ்வொரு பஞ்சுப் பொதியிலும் இப்போது கொள்முதல் கிராமம், பதப்படுத்தப்பட்ட தொழிற்சாலை மற்றும் விற்பனை தேதி பற்றிய தகவல்களுடன் கியூ.ஆர்  குறியீடு தடமறிதலின் கீழ் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028368

***

(Release ID: 2028368)

PKV/BR/RR


(Release ID: 2028430) Visitor Counter : 61