எரிசக்தி அமைச்சகம்

ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பகிர ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 22 JUN 2024 10:43AM by PIB Chennai

ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து 9 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பிற இடங்களுக்கு பகிர்ந்து விநியோகிக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டுசெல்லும்  திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்கள் கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவி இணைப்பதன் ஒரு பகுதியாகும், இதில் 200 ஜிகாவாட் ஏற்கனவே நிறுவப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் பின் வருமாறு:

1)ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்தின் மின்சாரத்தைப் பகிரும் திட்டம், ராஜஸ்தானில் இருந்து 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்ட மின்சாரத்தை விநியோகிக்கும். இந்த மின்சாரம் உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி பகுதி, ஃபதேபூர் மற்றும் ஓராய் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் நிறைவு காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 12,241கோடி.

2) கர்நாடகாவின் கொப்பல் மற்றும் கடக் பகுதியிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் விநியோகிக்கும்இத்திட்டம் 2027 ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும். இத்திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,354 கோடி ஆகும்.

 

***

ANU/SMB/PLM/KV

 

 



(Release ID: 2027883) Visitor Counter : 38