தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

புதுதில்லியில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

Posted On: 21 JUN 2024 4:35PM by PIB Chennai

புதுதில்லியில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் துறையின் இணையமைச்சர் திருமதி ஷோபா கரன்லாஜே, இத்துறையின் செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா மற்றும் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் யோகா பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றார். உலகம் முழுவதும் யோகா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் மனிதர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

-----

SMB/KPG/DL



(Release ID: 2027708) Visitor Counter : 16