உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

10-வது சர்வதேச யோகா தினம்: புதுதில்லி ராஜீவ்காந்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்பு

Posted On: 21 JUN 2024 3:42PM by PIB Chennai

10-வது சர்வதேச யோகா தினத்தன்று, புதுதில்லி ராஜீவ்காந்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு  கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நாயுடு, “மனதையும், உடலையும் ஒருங்கிணைக்கும் சமச்சீர் செயலான யோகா, சிந்தனையை செயல்பாட்டுடன் இணைப்பதுடன், மேலும் தனிநபர் நேர்த்தியையும் ஏற்படுத்துகிறது. உடல், மனது மற்றும் ஆன்மீக அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கு யோகா முழுமையாக வழிகாட்டுவதுடன், நமது இயந்திரமயமான வாழ்க்கையில் அமைதிக்கு தேவையான ஆதாரமாகவும் திகழ்கிறது” என்றார்.

சர்வதேச யோகா தினம் மூலம், யோகாவை சர்வதேசமயமாக்க பிரதமர் மேற்கொண்ட முயற்சிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். அத்துடன், யோகா இந்தியக் கலாச்சாரத்துடன் இணைந்த மதிப்புமிக்க பாரம்பரியமாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் புகழ், தற்போது வெளிநாடுகளுக்கும் பரவியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2027485

***

SMB/MM/RS/RR/DL



(Release ID: 2027616) Visitor Counter : 25