ஜல்சக்தி அமைச்சகம்

‘நமக்கும் சமூகத்திற்குமான யோகா’ என்ற மையக்கருத்துடன் 10-வது சர்வதேச யோகா தினத்தை ஜல்சக்தி அமைச்சகம் கொண்டாடியது

Posted On: 21 JUN 2024 2:38PM by PIB Chennai

சூரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையில், நமக்கும் சமூகத்திற்குமான யோகா’ என்ற மையக்கருத்துடன் பிரமாண்டமாக நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் கலந்துகொண்டார். அங்கு யோகா பயிற்சி மேற்கொண்ட அமைச்சர், நமது வாழ்க்கையை மனஅழுத்தமற்றதாக, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடையதாக மாற்றுவதற்கான தனித்துவ வழியாக யோகா திகழ்கிறது என்றார். அனைவரும்  இந்தப் புனிதமான பாதையைப் பின்பற்றி, அவரவர் வாழ்க்கையை ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கமுடையதாக மாற்றுவதுடன், நமக்குள்ளும், சமுதாயத்திலும் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய ஜல்சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா, தும்கூருவிலும், மற்றொரு இணையமைச்சர் டாக்டர்  ராஜ் பூஷன் சௌத்ரி, புதுதில்லி ஷ்ரம்சக்தி பவனிலும் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027405

***

 (Release ID: 2027405)



(Release ID: 2027576) Visitor Counter : 25