சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வாழ்க்கைக்காக யோகா தினம் இந்தியாவில் மட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது: திரு நிதின் கட்கரி
प्रविष्टि तिथि:
21 JUN 2024 12:56PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், 'தனிநபர் மற்றும் சமுதாயத்திற்கான யோகா' என்ற உணர்வுடன் நாம் இன்று யோகா தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று கூறினார்.
நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற திரு கட்கரி, ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கைக்காக யோகா தினம் இந்தியாவில் மட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகள் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினர். புதுதில்லி போக்குவரத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் திரு அனுராக் ஜெயின், இணைச் செயலாளர்கள் திரு கமலேஷ் சதுர்வேதி, டாக்டர் சுமன் சிங் உள்ளிட்ட அனைத்து மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
***
(Release ID: 2027337)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2027487)
आगंतुक पटल : 88