தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறும்படம் என்பது ஒரு கவிதை போன்றது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நீங்கள் அற்புதத்தை உணர்வீர்கள்: அன்னா ஹென்கெல்-டோனர்ஸ்மார்க்

प्रविष्टि तिथि: 20 JUN 2024 3:51PM by PIB Chennai

18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்ட குறும்படங்களின் பரவல் என்ற தலைப்பில் குழு விவாதம் இடம்பெற்றது.

திரைப்பட இயக்குநரும், பெர்லினேல் ஷார்ட்ஸ் அமைப்பின் தலைவருமான அன்னா ஹென்கெல்-டோனர்ஸ்மார்க், குறும்படங்களை கவிதையுடன் ஒப்பிட்டு, அழுத்தமான ஒப்புமையுடன் விவாதத்தைத் தொடங்கினார். "குறும்படம் ஒரு கவிதை போன்றது. ஒவ்வொரு பார்வையிலும், நீங்கள் புதிய, அற்புதமான உணர்வைப் பெறுவீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய குறும்பட விழாக்களில் ஒன்றான பெர்லினேல் ஷார்ட்ஸின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

பாக்கெட் ஃபிலிம்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான சமீர் மோடி, வலுவான திரைப்படத் துறையில் இருந்தும் குறும்படங்களுக்கான சந்தையாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார். "குறும்படம் என்பது கதை சொல்லும் ஒரு எளிய அதே சமயம் சக்திவாய்ந்த ஊடகம். இது யதார்த்தத்தை நீங்கள் சித்தரிக்கக்கூடிய ஊடகம்" என்று சமீர் கூறினார்.

புகழ்பெற்ற நடிகையான டிஸ்கா சோப்ரா, குறும்படங்கள் திரைப்படங்களுக்கு படிக்கட்டுகளாக மட்டுமல்லாமல், மதிப்புமிக்கவை என்று  கூறினார்.

ஆவணப்படம் மற்றும் குறும்பட இயக்குநரான விக்கேயேனோ ஷாவோ, குறும்படங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் போன்ற முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விளக்கினார்.
 

மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்கில் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் சோனி, வளர்ந்து வரும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த அமர்வை பிரபல ஆவணப்பட இயக்குநர் பங்கஜ் சக்சேனா நெறிப்படுத்தினார்.

***

(Release ID: 2027017)

AD/PKV/AG/RR


(रिलीज़ आईडी: 2027091) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Assamese , Odia , Kannada