நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோரப்படாத மற்றும் தேவையற்ற வணிக தகவல்தொடர்பு, 2024 தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை மத்திய அரசு கோருகிறது

प्रविष्टि तिथि: 20 JUN 2024 2:38PM by PIB Chennai

பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட் நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் அல்லது 10 இலக்க தனியார் எண்களில் இருந்து வரும் கோரப்படாத மற்றும் தேவையற்ற வணிகத் தொடர்புகளை முறைப்படுத்துவதற்காக இந்த உத்தேச நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வழிகாட்டி நெறிமுறைகள், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நுகர்வோர்  விவகாரங்கள் அமைச்சகம், 30 நாட்களுக்குள் (2024, ஜூலை 21) பொதுமக்களிடமிருந்து  கருத்துகள்/ ஆலோசனைகளை கோருகிறது.

வரைவு வழிகாட்டுதல்களை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

(https://consumeraffairs.nic.in/sites/default/files/file-uploads/latestnews/Guidelines%20for%20the%20Prevention%20and%20Regulation%20of%20Unsolicited%20and%20Unwarranted%20Business%20Communication%2C%202024.pdf).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026970

AD/MM/RS/RR

***


(रिलीज़ आईडी: 2027067) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Hindi_MP , हिन्दी , Marathi , Gujarati