நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மத்திய உணவு அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இந்திய உணவுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

Posted On: 19 JUN 2024 5:30PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று (19.06.2024) புதுதில்லியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் தலைமையகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ராவும் உடன் சென்றார். இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததுடன் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் நாடு முழுவதும் உணவு தானிய விநியோகத் திறனை மேம்படுத்துவது குறித்தும்  அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்திய உணவுக் கழகத் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் சென்ற போது, அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அனைத்து நிர்வாக இயக்குநர்கள், தலைமைப் பொது மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

மத்திய அமைச்சரை இந்திய உணவுக் கழக அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

******

 

AD/PLM/KPG/DL



(Release ID: 2026671) Visitor Counter : 43