சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் துறையின் 100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்

Posted On: 16 JUN 2024 11:13AM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நேற்று (15.6.2024) இணை அமைச்சர்கள் திரு  ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு  பி.எல் வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் . அடுத்த 100 நாட்களுக்கான துறையின் முக்கிய முயற்சிகளில் உத்திகளை அவர் வகுத்தார்.

இந்தக் கூட்டத்தில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகத்தின் (அலிம்கோ) நவீனமயமாக்கல் முயற்சிகளைத் தொடர்ந்து, துறையின் முன்முயற்சிகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை  செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர், இந்திய மறுவாழ்வு கவுன்சில், தேசிய நிறுவனங்கள், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் துறையின் பரவல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.  சாதனைகளை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான துறையின் உறுதிப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படுத்தியது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதில் இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் வலியுறுத்தினார். "சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசின்  கவனம் உள்ளது. அலிம்கோவின் நவீனமயமாக்கல் மற்றும் நமது  பல்வேறு அமைப்புகளின் சாதனைகள் இந்த இலக்கை நோக்கிய நமது  அர்ப்பணிப்புக்கு சான்றாகும்’’ என்று அவர் கூறினார்.

இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல்.வர்மா ஆகியோர் இந்த உணர்வுகளை ஆமோதித்து, இந்த முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தனர். செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள், உரிய நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் விரிவான திட்டங்களை வழங்கினர்.

எதிர்கால முன்னேற்றங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து, கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடைய அடுத்த 100 நாட்களில் அயராது உழைக்கும் அரசின் ஒருமித்த உறுதிப்பாட்டுடன் கூட்டம் நிறைவடைந்தது.

***


AD/PKV/DL



(Release ID: 2025678) Visitor Counter : 30