குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ராஜா பர்ப் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 14 JUN 2024 8:40PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 14, 2024) நடைபெற்ற ராஜா பர்ப் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். ராஜ கீதம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளையும், மயூர்பஞ்ச் சாவ் நடனம், சம்பல்புரி நடனம் மற்றும் கர்மா நடனம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு ரசித்தார்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூக்கள் மற்றும் மா இலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல்கள் இந்தத் திருவிழாவின் முக்கிய ஈர்ப்பாகும். மெஹந்தி கலைஞர்கள் அழைக்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு சர்பத் மற்றும் பான் தவிர பல்வேறு வகையான பிதா போன்ற ஒடியா உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஒடிசாவின் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவான ராஜா பர்ப் குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாடப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த கொண்டாட்டம் பங்கேற்பாளர்களுக்கு ஒடியா கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் தனித்துவமான பார்வையை வழங்கியது.

ராஜா பர்ப் ஒடிசாவின் அதிகம்  கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும். மூன்று நாள் நீடிக்கும் விவசாய திருவிழா பருவமழையின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பெண்களும் குழந்தைகளும் இந்தப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்

***

AD/PKV/DL



(Release ID: 2025518) Visitor Counter : 31