ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே இணை அமைச்சர் திரு. ரவ்னீத் சிங் ரயில்வே வாரிய உறுப்பினர்களுடன் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்
Posted On:
12 JUN 2024 4:53PM by PIB Chennai
ரயில்வே, உணவு பதனத் தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு ரவ்னீத் சிங், 2024 ஜூன் 11 அன்று ரயில்வே வாரிய உறுப்பினர்களுடன் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது இந்திய ரயில்வேயில் நடந்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர்கள் அமைச்சருக்கு விளக்கினர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும், இந்திய ரயில்வேயை உலகின் தலைசிறந்த ரயில்வேயாக மாற்றவும் அதிகாரிகள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு ரவ்னீத் சிங் வலியுறுத்தினார். ரயில்வே என்பது எளிய மக்களுக்கு வசதியான போக்குவரத்து முறை என்றும், அனைத்து வகுப்பினருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு சேவை செய்ய இந்திய ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
***
SRI/IR/AG/RR/DL
(Release ID: 2024802)
Visitor Counter : 88