நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை இணையமைச்சராக திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 3:25PM by PIB Chennai

 மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சராக திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இணை அமைச்சர் திரு பி.எல்.வர்மா ஆகியோர் முன்னிலையில் திருமதி பம்பானியாவுக்கு முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பூங்கொத்து வழங்கினார்.

திரு. பி.எல். வர்மாவும் இன்று புதுதில்லியில் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். திருமதி பம்பானியா முன்னிலையில் திரு கோயல், திரு ஜோஷி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் திரு வர்மாவை வரவேற்றனர்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு. சஞ்சீவ் சோப்ரா, நுகர்வோர் நலத்துறை செயலாளர் திருமதி நிதி காரே, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

 

SMB/IR/AG/RR/DL


(रिलीज़ आईडी: 2024329) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Gujarati , Telugu , Malayalam