சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சராக திருமதி அனுப்பிரியா படேல் பொறுப்பேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUN 2024 2:56PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சராக திருமதி அனுப்பிரியா படேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருமதி அனுப்பிரியா படேல் 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் மிர்சாபூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஜூலை முதல் 2019 மே வரை சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும், 2021 ஜூலை முதல் 2024 ஜூன் மாதம் வரை வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராகவும் இருந்தார்.
திருமதி படேல் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் உள்ளிட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
***
SMB/IR/AG/RR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2024228)
வருகையாளர் எண்ணிக்கை : 129