குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரை நேபாள பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUN 2024 6:12PM by PIB Chennai
நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா' இன்று (ஜூன் 10, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் கீழ், நேபாளம் முன்னுரிமை பங்குதாரர் என்று கூறிய குடியரசுத் தலைவர், நமது தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நேபாளத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
***
PKV/Rs/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2023809)
வருகையாளர் எண்ணிக்கை : 78