நித்தி ஆயோக்

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் ஆகியவை இணைந்து 2 முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளன

Posted On: 10 JUN 2024 4:55PM by PIB Chennai

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் இந்தியாவில் புதுமை மற்றும் நீடித்தத் தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு சிறப்பான முயற்சிகளைத் தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள ராயல் டேனிஷ் தூதரகத்தில் அமைந்துள்ள டென்மார்க் புதுமை கண்டுபிடிப்பு மையத்துடன் இணைந்து  அடல் புத்தாக்க இயக்கம், நீர் சவாலில் வெளிப்படையான புதுமைக் கண்டுபிடிப்புகளின் நான்காவது பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி கண்டுபிடிப்புத் தீர்வுகள் மூலம் சிக்கலான தண்ணீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இந்தியா - டேனிஷ் இருதரப்பு பசுமை உத்திசார்ந்த  கூட்டாண்மையின் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் இந்திய கூட்டாண்மையை உலகளாவிய அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டத்தில் பங்கேற்கும் மற்றும் 9 நாடுகளின் (இந்தியா, டென்மார்க், கானா, கென்யா, கொரியா, தான்சானியா, தென்னாப்பிரிக்கா, கானா, கொலம்பியா மற்றும் மெக்ஸிகோ) முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களிலிருந்து இளம் திறமையாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

**** 

 

ANU/PKV/IR/KPG/DL



(Release ID: 2023789) Visitor Counter : 64