தேர்தல் ஆணையம்

பொதுத் தேர்தல் 2024-ல் 65.79% வாக்குகள் பதிவானது


பொதுத் தேர்தல் 2024-ன் 7-வது கட்ட வாக்குப் பதிவில் 63.88% வாக்குகள் பதிவானது

Posted On: 06 JUN 2024 5:16PM by PIB Chennai

பொதுத் தேர்தல் 2024-ல் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 57 நாடாளுமன்ற தொகுதிகளில் 63.88% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 65.79% வாக்குகள் பொதுத் தேர்தல் 2024-ல் பதிவானதாக கூறியுள்ளது. வழக்கமான நடைமுறையின் படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்படும் தபால் வாக்குகள்  மற்றும் நேரடியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக் குறித்த விரிவான புள்ளியியல் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

7-வது கட்ட வாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்கள் 63.11% பேரும் பெண் வாக்காளர்கள் 64.72% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22.33% பேரும் வாக்களித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023231

----

AD/IR/KPG/DL



(Release ID: 2023268) Visitor Counter : 67