சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பழச்சாறுகளின் லேபிள் மற்றும் விளம்பரத்திலிருந்து 100% பழச்சாறு என்ற கூற்றை அகற்ற எஃப்.பி.ஓ.க்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவு

Posted On: 03 JUN 2024 8:08PM by PIB Chennai

மறுசீரமைக்கப்பட்ட பழச்சாறுகளின் லேபிள்கள் மற்றும் விளம்பரங்களில் இருந்து '100% பழச்சாறு' குறித்த கூற்றை உடனடியாக அகற்றுமாறு அனைத்து உணவு வணிக இயக்குநர்களுக்கு (எஃப்.பி.ஓ) இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து எஃப்.பி.ஓக்களும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள முன் அச்சிடப்பட்ட அனைத்து பேக்கேஜிங் பொருட்களையும் செப்டம்பர் 1, 2024 க்கு முன் தீர்த்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பல எஃப்.பி.ஓக் கள் 100%  பழச்சாறு என்று கூறி பல்வேறு வகையான மறுசீரமைக்கப்பட்ட பழச்சாறுகளை தவறாக சந்தைப்படுத்தி வருவது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-இன் கவனத்திற்கு வந்துள்ளது. முழுமையான பரிசோதனைக்குப் பின்னர், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விளம்பரம் மற்றும் உரிமைகோரல்கள்) விதிமுறைகள் 2018 இன் படி, '100%' உரிமைகோரல் ஏற்புடையது அல்ல என்று முடிவு செய்துள்ளது. இத்தகைய கூற்றுக்கள் தவறாக வழிநடத்துகின்றன.

மறுசீரமைக்கப்பட்ட பழச்சாறுகளை '100% பழச்சாறு' என்று சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட தெளிவுபடுத்தலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு தயாரிப்புகள் தரநிலைகள் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் துணை ஒழுங்குமுறை 2.3.6 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பழச்சாறுகளுக்கான தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று எஃப்.பி.ஓக்கள் நினைவூட்டப்படுகின்றன. இந்த்த் தரநிலையால், மூடப்பட்ட தயாரிப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (லேபிளிங் மற்றும் காட்சி) விதிமுறைகள், 2020 இன் படி லேபிளிடப்பட வேண்டும் என்று இந்த ஒழுங்குமுறை கூறுகிறது. குறிப்பாக, மூலப்பொருள் பட்டியலில், செறிவிலிருந்து மறுசீரமைக்கப்பட்ட சாறின் பெயருக்கு எதிராக "மறுசீரமைக்கப்பட்ட" என்ற சொல் குறிப்பிடப்பட வேண்டும். கூடுதலாக, சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்து இனிப்புகள் 15 கிராம் / கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தயாரிப்பு 'இனிப்புச் சாறு' என்று பெயரிடப்பட வேண்டும்.

***

 

TS/BR/RR

(Release ID: 2022681)



(Release ID: 2022729) Visitor Counter : 67