சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவமனைகளில் தீத்தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில / யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

Posted On: 03 JUN 2024 4:26PM by PIB Chennai

மருத்துவமனைகளில் தீத்தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில / யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பொது சுகாதாரம் மற்றும் கொள்கைப் பிரிவின் கூடுதல் செயலாளர்  தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறைகளின் 15 பிரதிநிதிகளும் சுகாதார அமைப்புகளும் 390 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொதுப்பணித்துறைகள், உள்ளூர் தீயணைப்புத்துறைகள்  ஆகியவற்றுடன்  சிறந்த  ஒத்துழைப்பை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் உரிய நேரத்தில் தீத்தடுப்பு பாதுகாப்புக்கான தடையில்லா சான்றிதழை விரைந்து பெற முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்தைத் தடுப்பதற்கும் தீத்தடுப்பு விதிமுறைகளைப் பராமரிப்பதற்குமான நடைமுறைப் பட்டியல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பரிமாறப்பட்டன.

பெருளமவிலான மதிப்பீடுகள் பின்னூட்டமாக பெறப்பட்ட பின் தீத்தடுப்புக்கான ஒத்திகைகள் நடத்தப்படுவதையும், தீத்தடுப்பு நடைமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டன.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனக் கருவிகள் மற்றும் பிற  எந்திரங்கள் காரணமாக ஏற்படும் மின்கசிவு, மின்பயன்பாட்டு நடைமுறையில் உள்ள  குறைபாடுகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் போன்றவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக அவ்வப்போது இத்தகையக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

-----

AD/SMB/KPG/KV



(Release ID: 2022629) Visitor Counter : 49