மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

'டிஜிட்டல் ஆளுகைக்கான பயனர் இடைமுகம் / பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்' குறித்த பயிலரங்கங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சம் ஏற்பாடு செய்து நடத்தியது

Posted On: 28 MAY 2024 5:25PM by PIB Chennai

இணையதளங்கள் மற்றும் செயலிகளில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 28 மே 2024 அன்று 'டிஜிட்டல் ஆளுகைக்கான பயனர் இடைமுகம் / பயனர் அனுபவத்தில் (UI/UX) மாற்றத்தை ஏற்படுத்தி அவற்றை மேம்படுத்துதல்' குறித்த தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது.

இந்த பயிலரங்கம் அரசு, தொழில்துறையினர், வடிவமைப்பாளர்கள், மற்றும் பிற தொடர்புடைய பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் சேவைகளில் உள்ள நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதித்தது.

இந்தப் பயிலரங்கின்போது வெளியுறவு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பொதுச் சேவை மையங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பயிலரங்கிற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தேசிய தகவல் மையத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான திரு. அமித் அகர்வால் தலைமை தாங்கினார். பயிலரங்கின் போது, தொழில்துறையினர் மற்றும் அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற குழு விவாதங்கள் இடம்பெற்றன.

************

(Release ID: 2021958)

PLM/RR



(Release ID: 2022039) Visitor Counter : 32


Read this release in: Odia , English , Urdu , Hindi , Telugu