தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம் காசியாபாதில் நடைபெற்றது

Posted On: 28 MAY 2024 4:15PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்புத் துறை, காசியாபாத்தில் உள்ள தேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இன்று (மே 28, 2024)  சஞ்சார் மித்ரா எனப்படும் தொலைத் தொடர்பு தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கை நடத்தியது.

 

சஞ்சார் மித்ரா திட்டத்தின் கீழ், தொலைத் தொடர்புத் துறையின் பல்வேறு சேவைகள் குறித்தும் இணையதள மோசடிகளின் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 

இதன் மூலம், டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தில்  மாணவர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் நூறு 5 ஜி பயன்பாட்டு  ஆய்வகங்களைக் கொண்ட மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் மாணவர்களிடமிருந்து சஞ்சார் மித்ரா தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணைய உறுப்பினர் மது அரோரா, பயிலரங்கின் போது சஞ்சார் மித்ரா எனப்படும் தொலைத் தொடர்பு தன்னார்வலர்களிடையே உரையாற்றினார்.

 

இன்றைய டிஜிட்டல் உலகில் தொலைத்தொடர்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.  இன்றைய டிஜிட்டல் முன்னேற்றங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார். எனவே, சஞ்சார் மித்ரா திட்டம், டிஜிட்டல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் முக்கியமான ஒரு படியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

***

 

ANU/SMB/PLM/KV/DL



(Release ID: 2021974) Visitor Counter : 37