ஆயுஷ்

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்புகளில் மருந்து ஆராய்ச்சி -2024 ஐ தொடங்கவுள்ளது

Posted On: 27 MAY 2024 10:21AM by PIB Chennai

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் 2024 மே 28 அன்று புதுதில்லியில் "ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பில் மருந்து ஆராய்ச்சி" என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்வில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் மற்றும் ஆயுர்வேத மருந்து தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்.

 

இந்த நிகழ்ச்சியை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வி.டி.ராஜேஷ் கோடேச்சா தொடங்கி வைக்க உள்ளார். ஆயுர்வேத வளர்ச்சியில் தொழில்துறையின் பங்கு குறித்து அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். இணைச் செயலாளர் திருமதி கவிதா கார்க், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் கௌஸ்துபா உபாத்யா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

 

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் தலைமை இயக்குநர் பேராசிரியர் வைத்ய ரபிநாராயண் ஆச்சார்யா இக் கூட்டத்திற்குத் தமது பிரிவின் சார்பில் தலைமை தாங்க உள்ளார். ஆராய்ச்சி அடிப்படையிலான, தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவார். ஆயுர்வேத முறைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை இணைப்பதன் மூலம் மருந்து மற்றும் சாதன மேம்பாட்டில் ஆயுர்வேதப் பங்குதாரர்களின் திறனை அதிகரிப்பதே கூட்டத்தின் நோக்கமாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021761

 

******

 

SRI/IR/RR/KR



(Release ID: 2021782) Visitor Counter : 36