வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஒப்பந்தம், இந்தியா மற்றும் உலகளாவிய தெற்கிற்கு ஒரு பெரிய வெற்றி

Posted On: 26 MAY 2024 5:47PM by PIB Chennai

அறிவுசார் சொத்துரிமை, மரபணு வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவு தொடர்பான உலக அறிவுசார் சொத்து அமைப்பின்  ஒப்பந்தம், உலகின் தெற்கில் உள்ள நாடுகளுக்கும், ஏராளமான பாரம்பரிய அறிவு மற்றும் ஞானத்துடன் ஒரு மெகா பல்லுயிர் மையமாக உள்ள இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

பல நூற்றாண்டுகளாக பொருளாதாரங்கள், சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஆதரித்த அறிவு மற்றும் ஞானத்தின் அமைப்பு இப்போது உலகளாவிய அறிவுசார் சொத்து அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அறிவு மற்றும் ஞானத்தை வழங்குபவராகவும், பல்லுயிர் பெருக்கத்தின் களஞ்சியமாகவும் இந்தியா நீண்ட காலமாக வென்றெடுத்த வரலாற்று சாதனைகள் இவை.

இந்த ஒப்பந்தம் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், காப்புரிமை அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். கண்டுபிடிப்புகளை வலுப்படுத்தும். இதன் மூலம், அறிவுசார் சொத்துரிமையில்   புதுமைகளை தொடர்ந்து ஊக்குவிக்க முடியும்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.  அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கி, இந்த வளங்களையும் அறிவையும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்காக பயன்படுத்தும் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளுடன், இந்த ஒப்பந்தம் அறிவுசார் சொத்து அமைப்புக்குள் முரண்பட்ட முன்னுதாரணங்களை இணைப்பதற்கும் பல தசாப்தங்களாக நிலவி வரும் பல்லுயிர் பாதுகாப்பிற்கும் வழி வகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021716

***

ANU/AD/PKV/KV

 

 

 

 

 



(Release ID: 2021735) Visitor Counter : 84