அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) – மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மின்சார உழவு எந்திரத்தை அறிமுகப்படுத்தியது
Posted On:
26 MAY 2024 9:35AM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி மே 25 அன்று துர்காபூரில் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மின்சார உழவு எந்திரத்தை (எலக்ட்ரிக் டில்லர்) அறிமுகப்படுத்தினார்.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.எம்.இ.ஆர்.ஐ.யின் இந்தப் புதுமையான தொழில்நுட்பம் நாட்டின் விவசாய சமூகத்தில் 80% க்கும் அதிகமான சிறு மற்றும் குறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், இதனால் கணிசமாகக் குறையும் வேளாண் செலவுகளிலிருந்து பயனடைவார்கள். பல்வேறு விவசாயப் பணிகளுக்கு இந்த மின்சார உழவு எந்திரத்தைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த நவீன எந்திரம் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் பெருமளவில் பயன்படும்.
மின்சார உழவு எந்திரம் மேம்பட்ட கள செயல்திறனைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பயனர் வசதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது அதிர்வுகளை கணிசமாகக் குறைப்பதுடன், பாரம்பரிய உழவு எந்திரங்களுடன் ஒப்பிடுகையில், பூஜ்ஜிய வெளியேற்ற உமிழ்வை வெளியிடுகிறது. . வேளாண் செலவுகளை 85% வரை குறைக்கும் திறனுடன், அதன் பயனர் நட்பு வடிவமைப்பு மின்சாரம் மற்றும் சோலார் டிசி சார்ஜிங் உள்ளிட்ட பல சார்ஜிங் வாய்ப்புகளை வழங்குகிறது.
கலப்பைகள், இரும்பு சக்கரங்கள் போன்ற பரந்த அளவிலான நிலையான விவசாய இணைப்புகளுடன் தடையின்றி ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2 அங்குல நீர் பம்ப் மற்றும் 500 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்ட ஒரு தள்ளுவண்டி இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இது அதன் பல்துறை திறனை மேலும் மேம்படுத்துகிறது. ஓட்டுநர்கள் எளிதாக கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம். சி.எஸ்.ஐ.ஆர்-சி.எம்.இ.ஆர்.ஐ.யின் இந்த மின்சார எந்திரம் விவசாய எந்திரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, இது மிகவும் நிலையான மற்றும் திறமையான விவசாய எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.
***
ANU/AD/PKV/KV
(Release ID: 2021692)
Visitor Counter : 118