பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பெங்களூருவில் உள்ள விமான அமைப்புகள் சோதனை நிறுவனம் மற்றும் விமானப்படை விமானிகள் சோதனைப் பள்ளியைப் பார்வையிட்டார்

Posted On: 25 MAY 2024 2:59PM by PIB Chennai

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் நேற்று (24 மே 2024) பெங்களூருவில் உள்ள விமான அமைப்புகள் சோதனை நிறுவனம் (ASTE-ஏஎஸ்டிஇ) மற்றும் விமானப்படை விமானிகள் சோதனைப் பள்ளி (AFTPS-ஏஎஃப்டிபிஎஸ்) ஆகியவற்றைப் பார்வையிட்டார். விமான சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய சோதனைக் குழுவினர் மற்றும் விஞ்ஞானிகள் செய்த தியாகத்தை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஏஎஸ்டிஇ-ல் நடைபெற்று வரும் சோதனைகள் மற்றும் ஏஎஃப்டிபிஎஸ்-ஸின் விமான சோதனைப் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து திரு அனில் சௌகானுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

ஏஎஸ்டிஇ மற்றும் ஏஎஃப்டிபிஎஸ்-ஸில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். ஏஎஸ்டிஇ மற்றும் ஏஎஃப்டிபிஎஸ்-ஸின் ஐம்பது ஆண்டு கால செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கற்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கலைப்பொருட்களைக் கொண்ட, அருங்காட்சியகத்தையும் முப்படைகளின் தலைமை தளபதி பார்வையிட்டார்.

ஏஎஃப்டிபிஎஸ்-ஸில் நடத்தப்பட்ட 46-வது விமான சோதனை பாடத் திட்ட நிறைவு விழாவிற்கும் ஜெனரல் அனில் சௌகான் தலைமை வகித்தார். இதில் மொத்தம் 17 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

 

திரு அனில் சௌகான் தமது உரையில், இந்த முக்கியமான துறையில் மிக உயர்ந்த தரத்திலான பயிற்சியை வழங்குவது, நாட்டின் விமானப் படை கட்டமைப்பை மேம்படுத்துவது, விமானப்படையின் திறனை அதிகரிப்பது மற்றும் நவீனமயமாக்குவதில் ஏஎஸ்டிஇ மற்றும். ஏஎஃப்டிபிஎஸ் ஆற்றும் முக்கிய பங்கிற்காக அங்குள்ள அனைத்து ஊழியர்களையும் பாராட்டினார். செயல்பாட்டு தயார்நிலைக்கான தரம் மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய, தொழில்முறை திறனின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பட்டம் பெற்றவர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். அவர்கள் தங்கள் பயணத்தில் உயர் தொழில்முறை திறனை அடைய தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று ஜெனரல் அனில் சௌகான் அறிவுறுத்தினார்.

***

ANU/AD/PLM/KV

 

 

 


(Release ID: 2021613) Visitor Counter : 491