ஆயுஷ்
azadi ka amrit mahotsav

10-வது சர்வதேச யோகா தினம், 2024 கொண்டாட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் ஏற்பாடு செய்தது

प्रविष्टि तिथि: 21 MAY 2024 6:16PM by PIB Chennai

10-வது சர்வதேச யோகா தினம், 2024 கொண்டாட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் ஏற்பாடு செய்தது. 'மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான யோகா' என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரா ஊக்கமளிக்கும் வகையில் பேசக்கூடிய, சகோதரி பி.கே.ஷிவானி பங்கேற்று உரையாற்றினார். ஆயுர்வேதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் குறித்து சமூகத்திற்கு விரிவான வகையில் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் ஆற்றும் சேவைகளை பாராட்டினார். விடாமுயற்சியின் முக்கியத்துவத்தையும், மனிதகுல மேம்பாட்டிற்கான மாற்றத்தைக் கொண்டுவருவதில் யோகாவின் முக்கியத்துவத்தையும் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிருக்கு அதிகாரமளித்தல் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார்.

-----

 

SRI/IR/KPG/DL/ANU


(रिलीज़ आईडी: 2021270) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati