தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊதிய தரவு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024, மார்ச் மாதத்தில் 14.41 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 20 MAY 2024 6:49PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024, மே 20 அன்று வெளியிட்ட தற்காலிக ஊதியத் தரவின்படி, 2024 மார்ச் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, 14.41 லட்சம் நிகர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2024 மார்ச் மாதத்தில் சுமார் 7.47 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அத்தரவு சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புதிய உறுப்பினர்களில் 56.83% பேர் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து வெளியேறிய சுமார் 11.80 லட்சம் உறுப்பினர்கள் மீண்டும் அதில் இணைந்துள்ளதாக ஊதியத் தரவு தெரிவிக்கிறது. மார்ச் மாதத்தில் இணைந்த 7.47 லட்சம் புதிய உறுப்பினர்களில் சுமார் 2 லட்சம் பேர்  பெண் உறுப்பினர்கள் ஆவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021134

 **** 

ANU/SRI/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2021140) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu