பாதுகாப்பு அமைச்சகம்
"அக்னிவீரர்கள் ராணுவ வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலர்கள்" என்று முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறினார்
Posted On:
20 MAY 2024 5:40PM by PIB Chennai
அக்னிவீரர்கள் ராணுவ வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலர்கள் என்று முப்படையின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். 2024, மே 20 அன்று பெலகாவியில் உள்ள மராத்தா ரெஜிமென்டல் சென்டர் மற்றும் ஏர்மேன் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் அக்னிவீரர்களுடன் அவர் உரையாடினார்.
இராணுவ சேவையின் உன்னத நோக்கத்தையும், இராணுவ கட்டமைப்பிற்குள் அதன் முக்கிய பங்கையும் சுட்டிக்காட்டிய முப்படைத் தளபதி, ஆயுதப் படைப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்காக அக்னிவீரர்களைப் பாராட்டினார். நாட்டிற்கான அவர்களின் தனித்துவமான கடமைக்கு இது ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களையும், சவாலான சூழல்களில் செயல்படும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து குறிப்பிட்ட ஜெனரல் அனில் சவுகான், சவால்கள் இருந்தபோதிலும், அக்னிவீரர்கள் தங்கள் பணியை மிகுந்த பலன்களுடனும், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியுடனும், நாட்டிற்கு சேவை செய்வதில் மிக்க பெருமை உணர்வைப் பெறவும் வழிவகுக்கும் என்றும் உறுதியளித்தார்.
பெலகாவியில் உள்ள ஏர்மென் பயிற்சிப் பள்ளிக்குச் சென்ற அனில் சௌகான் இந்திய விமானப் படையில் அக்னிவீர்களுக்கான பயிற்சிக் குறித்து ஆய்வு செய்தார். விமானப் படையில் உள்ள 3-ம் பிரிவைச் சேர்ந்த அக்னிவீரவாயு பயிற்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். எதிர்காலத்தில் போர் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கும் தொழில்நுட்ப வீரர்களாக மாறுவதற்கான பயிற்சியில் கவனம் செலுத்துமாறு அவர் அவர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021122
***
ANU/SRI/IR/KPG/DL
(Release ID: 2021139)
Visitor Counter : 71