வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இருவார தூய்மை இயக்கத்தை தொடங்கியது
प्रविष्टि तिथि:
16 MAY 2024 4:58PM by PIB Chennai
தூய்மை மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் நிலையை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இருவார தூய்மை இயக்கத்தைத் தொடங்கியது. புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கிய இந்நிகழ்வு 2024 மே 31 வரை நடைபெறும்.
தொடக்க விழாவின் போது, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறையின் குழுவினர் தூய்மை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தூய்மை நடவடிக்கைகளில் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியும், தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்தியை பரப்பவும் இந்தக் குழு உறுதிமொழி எடுத்துக் கொண்டது. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்த தூய்மை நடைமுறைகளை பின்பற்றுவதை வலியுறுத்தியது.
அப்போது பேசிய செயலாளர், தூய்மை முயற்சிகளை ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து ஊழியர்களும் ஆண்டு முழுவதும் தூய்மை நடைமுறைகளில் தீவிரமாக பங்கேற்று செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020795
***
AD/IR/AG/KV/DL
(रिलीज़ आईडी: 2020808)
आगंतुक पटल : 106