குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் கமலா பெனிவால் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் இரங்கல்

प्रविष्टि तिथि: 15 MAY 2024 6:21PM by PIB Chennai

திரிபுரா, குஜராத் மற்றும் மிசோரம் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சருமான டாக்டர் கமலா பெனிவால் மறைவிற்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் குடியரசு துணைத்தலைவர் கூறியிருப்பதாவது:

துணைத்தலைவர் டாக்டர் கமலா பெனிவாலின் குறிப்பிடத்தக்க புத்திக் கூர்மையான நிர்வாகியாகவும், மகளிர் அதிகாரமளித்தலின் அடையாளமாகவும் பிரதிபலித்தார். "அவரது எளிமையும், உறுதியும் அவருக்கு பல தொண்டர்களைப் பெற்றுத் தந்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் கமலா பெனிவாலுடனான தனது நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், அவரது மறைவை தனிப்பட்ட இழப்பு என்று விவரித்துள்ளார். மேலும் டாக்டர் கமலா பெனிவாலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

*****

ANU/AD/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2020722) आगंतुक पटल : 95
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu