பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இலங்கை குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 3-வது திறன் மேம்பாட்டுப் பயிற்சி முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் நடைபெறுகிறது
Posted On:
14 MAY 2024 12:11PM by PIB Chennai
முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (என்சிஜிஜி) 2024 மே 13 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை இலங்கை குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த அரசு செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட 41 பேர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம், தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில், நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டுக்கு உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. நட்பு நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இலங்கை அதிகாரிகளுக்கான பயிற்சி அமர்வை, நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் துறைச் செயலாளருமான திரு வி.ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே, நல்லாட்சி நடைமுறைகளில் உள்ள பொதுத்தன்மைகள் மற்றும் பரஸ்பர கற்றலுக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார். அரசுக்கும், மக்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிஷியா, செஷல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூடான், மியான்மர், எத்தியோப்பியா, எரிட்ரியா மற்றும் கம்போடியா ஆகிய 17 நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி) வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்துள்ளது.
****
(Release ID : 2020526)
SRI/PLM/KPG/KR
(Release ID: 2020555)
Visitor Counter : 76