பாதுகாப்பு அமைச்சகம்
மும்பை கடற்பகுதியில் 4 மாலுமிகளுடன் பிடிபட்ட மீன்பிடி படகை, 30,000 லிட்டர் டீசல், ரூ.1.75 லட்சம் ரொக்கத்துடன் இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது
प्रविष्टि तिथि:
13 MAY 2024 8:11PM by PIB Chennai
இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) மே 12 அன்று மும்பைக்கு தென்மேற்கே 27 கடல் மைல் தொலைவில் நான்கு பணியாளர்களுடன் சென்ற மீன்பிடி கப்பலை வழிமறித்து சோதனையிட்டது.
கப்பலை முழுமையாக சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இருந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி கப்பல் மும்பை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது முறையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
***
(Release ID: 2020471)
SRI/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2020547)
आगंतुक पटल : 105