பாதுகாப்பு அமைச்சகம்

வியட்நாமில் உள்ள கேம் ரான் விரிகுடாவுக்கு இந்திய கடற்படை கப்பல் கில்டான் வருகை

Posted On: 12 MAY 2024 7:19PM by PIB Chennai

மே 12, 24 அன்று வியட்நாமின் கேம் ரான் விரிகுடா வந்தடைந்த ஐ.என்.எஸ் கில்டன் கப்பலுக்கு வியட்நாம் கடற்படை வீரர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படையின் செயல்பாட்டு வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் ஆயத்தமாக உள்ளது.

இந்தியாவும் வியட்நாமும் விரிவான ராஜதந்திர கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில், இந்திய கடற்படைக் கப்பல் கில்டனின் வருகை, தொழில்முறை கலந்துரையாடல்கள், விளையாட்டு, சமூக பரிமாற்றங்கள் மற்றும் இரு கடற்படைகளின் பகிரப்பட்ட மதிப்புகளை பிரதிபலிக்கும் சமூக அணுகல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. இந்திய கடற்படை மற்றும் வியட்நாம்  கடற்படை இடையேயான கடல்சார் கூட்டாண்மை பயிற்சியுடன் இந்தப் பயணம் நிறைவடையும். இந்தப் பயிற்சி, சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர செயல்பாட்டு மற்றும் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்தும்.

ஐ.என்.எஸ் கில்டன் என்பது ஒரு உள்நாட்டு ஏ.எஸ்.டபிள்யூ கார்வெட் ஆகும், இது இந்திய கடற்படையின் கடற்படை

வடிவமைப்பு இயக்குநரகத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜி.ஆர்.எஸ்.இ) நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஐ.என்.எஸ் கில்டன் நான்கு பி 28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் (ஏ.எஸ்.டபிள்யூ) கார்வெட்டுகளில் மூன்றாவதாகும்.

                              ***

 

ANU/SRI/BR/KR



(Release ID: 2020406) Visitor Counter : 74


Read this release in: English , Urdu , Marathi , Hindi