பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை தென் சீனக் கடலில் கிழக்கு கடற்படை நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக சிங்கப்பூரை வந்தடைந்தன
Posted On:
07 MAY 2024 11:11AM by PIB Chennai
மே 06-ம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை சிங்கப்பூர் குடியரசின் கடற்படை வீரர்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரால் அன்புடன் வரவேற்கப்பட்டன. தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை செயல்பாட்டு வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணம் இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளது.
கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலத்தில், இந்திய தூதருடனான தொடர்புகள், சிங்கப்பூர் குடியரசு கடற்படையுடனான தொழில்முறை தொடர்புகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக அவுட்ரீச் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது இரு கடற்படைகளின் பகிரப்பட்ட மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது.
இந்தியக் கடற்படையும் சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையும் கடந்த மூன்று தசாப்தங்களாக வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் தொடர்ச்சியான வருகைகள், சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பயிற்சி ஏற்பாடுகள் மூலம் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலைநிறுத்தல் இரு கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான இணைப்புகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
***
PKV/AG/KV
(Release ID: 2019827)
Visitor Counter : 110