புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச சூரிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் 'ரன் ஃபார் சன்' மாரத்தான் போட்டி நடைபெற்றது

Posted On: 03 MAY 2024 8:30PM by PIB Chennai

பசுமையான மற்றும் ஆரோக்கியமான கிரகத்தை வளர்ப்பதில் சூரிய சக்தியின் குறிப்பிடத்தக்க நன்மைகளை வருடாந்திர நினைவூட்டலாக 2024 மே 3ஆம் தேதி சர்வதேச சூரிய தினத்தை கொண்டாடுவதில் இந்திய அரசு உலக சமூகத்துடன் இணைந்தது. இந்த நாளில், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 'ரன் ஃபார் சன்' மராத்தான் ஓட்டத்தை ஏற்பாடு செய்தது. 3 கி.மீ மற்றும் 5 கி.மீ பந்தயங்களைக் கொண்ட 'ரன் ஃபார் சன்' மராத்தான், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும், அனைவருக்கும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை ஊக்குவிப்பதில் சூரிய சக்தியின் முக்கிய பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நாட்டின் திடமான  உறுதிப்பாட்டை மாரத்தான் வெளிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் எஸ் பல்லா,"இந்த நிகழ்வு நிலையான எரிசக்தி தீர்வுகளை முன்னெடுப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  சுற்றுச்சூழல் மேற்பார்வையை நோக்கிய நமது பயணத்தில் சூரிய சக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதற்கான அரசின் தொலைநோக்குடன் இந்த மாரத்தான் சரியாக ஒத்துப்போகிறது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் காரணத்தை முன்னெடுக்கும் அதே வேளையில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தழுவுவதற்கு குடிமக்களை நாங்கள் ஊக்குவித்தோம். இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்த உற்சாகமும் ஆதரவும் பெற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேகத்தை கட்டியெழுப்புவதிலும்அதை வருடாந்திர பாரம்பரியமாக நிறுவுவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்’’ என்றார்.

தில்லி என்.சி.ஆர், பெங்களூரு, வதோதரா, கவுகாத்தி, வாரணாசி, சென்னை ஆகிய ஆறு இந்திய நகரங்களில் உள்ள முக்கிய வணிக வளாகங்களில்  12 கவர்ச்சிகரமான அரங்குகள் சர்வதேச சூரிய தின கொண்டாட்டங்களின் மற்றொரு சிறப்பம்சமாக  அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், சர்வதேச சூரிய தினத்தை அங்கீகரிப்பதற்காக, கலை வெளிப்பாடுகள் மூலம் சூரிய சக்தியைக் கொண்டாடுவதற்கான ஈடுபாட்டு மற்றும் கல்வி வழியாக அகில இந்திய பள்ளிகளுக்கு இடையேயான சோலார்ட் என்ற சூரிய கலை போட்டியையும் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த போட்டி படைப்பாற்றலைத் தூண்டவும், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே சூரிய ஆற்றல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் முயல்கிறது. பள்ளிகளால் தீர்மானிக்கப்படும் வெற்றியாளர்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

*****

AD/PKV/DL



(Release ID: 2019644) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi , Punjabi