பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-2030 வரை 1500 அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பங்களாதேஷ் அரசின் பொது நிர்வாக அமைச்சகமும் ஒப்புக் கொண்டுள்ளன

Posted On: 30 APR 2024 7:57PM by PIB Chennai

2025-2030 வரை 1500 அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பங்களாதேஷ் அரசின் பொது நிர்வாக அமைச்சகமும் ஒப்புக் கொண்டுள்ளன.


பங்களாதேஷ் பொது நிர்வாக அமைச்சக அழைப்பின் பேரில் 4 பேர் கொண்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையைச் சேர்ந்த தூதுக்குழுவின் பங்களாதேஷ் பயணம் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கான கள நிர்வாகத்தில் இடைக்காலத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தியது.


2025-2030 காலப்பகுதிக்கு இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் பங்களாதேஷ் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக வருகை தந்த நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் தூதுக்குழுவினருக்கும் பங்களாதேஷ் அரசின் பொது நிர்வாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே 2024 ஏப்ரல் 28-30 வரை நட்பு மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாக அந்தத் துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.


இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம், பங்களாதேஷ் பொது நிர்வாக அமைச்சகம் ஆகியவை 2014 முதல் பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துவதில்  ஒத்துழைத்துள்ளன.


----

ANU/SMB/KPG/DL


(Release ID: 2019369) Visitor Counter : 55


Read this release in: English , Urdu , Hindi , Punjabi