எரிசக்தி அமைச்சகம்

ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (ஆர்இசி), இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்தர நிகர லாபத்தை ஈட்டியுள்ளது

Posted On: 30 APR 2024 2:56PM by PIB Chennai

மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் லிமிடெட்டின் இயக்குநர்கள் குழு, 2024 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளுக்கு இன்று ஒப்புதல் அளித்தது.

ஆர்.இ.சி அதன் வரிக்கு பிந்தைய அதிகபட்ச வருடாந்தர லாபத்தை ரூ.14,019 கோடியாக பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, 31 மார்ச் 2024 அன்று முடிவடைந்த ஆண்டின் ஒரு பங்கிற்கான வருவாய் 31 மார்ச் 2023 நிலவரப்படி ரூ. 41.85 க்கு எதிராக 27% அதிகரித்து ரூ. 53.11 ஆக அதிகரித்தது.

லாப வளர்ச்சியின் உதவியுடன், நிகர மதிப்பு 31 மார்ச் 2024 நிலவரப்படி ரூ.68,783 கோடியாக அதிகரித்துள்ளது. இது சென்ற ஆண்டைவிட 19% அதிகமாகும்.

நிறுவன இயக்குநர்கள் குழு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.5 (ஒவ்வொன்றும் ரூ.10/- முக மதிப்பில்) மற்றும் 2023-24 நிதியாண்டிற்கான மொத்த ஈவுத்தொகை பங்கு ஒன்றுக்கு ரூ. 16 என அறிவித்துள்ளது.

***

AD/SMB/RS/RR/DL



(Release ID: 2019190) Visitor Counter : 45