சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சிமாநாடு புதுதில்லியில் தொடங்கியது - சக்தி எரிசக்தி அறக்கட்டளையுடன் சுரங்க அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 29 APR 2024 7:33PM by PIB Chennai

'முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சி மாநாடு புதுதில்லியில் இன்று (29.4.2024) தொடங்கியது. முக்கியமான கனிம வளம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் புதுமையை ஊக்குவிப்பதற்காக இந்த 2 நாள் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் தொடக்க விழாவிற்கு தலைமை வகித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் நிலப்பரப்பு மற்றும் கடல் சூழல்களிலிருந்து பெறப்படும் பல்வேறு வகையான கனிமங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ன.

நிகழ்ச்சியில் பேசிய சுரங்க அமைச்சக செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ், நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தூய்மையான எரிசக்திக்கு முக்கிய கனிமங்கள் தொடர்பாக வலுவான ஆய்வு தேவை என்றார். உள்நாட்டு கனிம ஆய்வு மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசின் சமீபத்திய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகம் மற்றும் சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ) கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சுரங்க அமைச்சகம், சக்தி எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவற்றுக்கு இடையே கூட்டுச் செயல்பாட்டுக்கு வழி வகுக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி ஆகியவை  தொடர்பாக  ஆய்வு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

-----

(Release ID: 2019100)

ANU/AD/PLM/KPG/DL


(Release ID: 2019105) Visitor Counter : 65