குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2024, ஏப்ரல் 26 அன்று குடியரசு துணைத்தலைவர் திருப்பதி மற்றும் ஹைதராபாத் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 24 APR 2024 5:49PM by PIB Chennai

2024, ஏப்ரல் 26 அன்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்  ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி தெலங்கானாவின் ஹைதராபாத் ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி  ஆலயத்தில் வழிபாடும், தரிசனமும் செய்து தமது ஆந்திப்பிரதேசப் பயணத்தை குடியரசு துணைத்தலைவர் தொடங்குவார். திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில் திரு தன்கர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.

இந்த ஒருநாள் பயணத்தின் போது, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் குடியரசு துணைத்தலைவர் பயணம் மேற்கொள்வார்.

***

AD/SMB/RS/DL


(रिलीज़ आईडी: 2018759) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , Urdu , हिन्दी , Marathi , Telugu