அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புவி தினத்தை கொண்டாட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் தலைமையகத்தில் நாட்டின் மிகப்பெரிய பருவநிலை கடிகாரம் இயங்க செய்யப்பட்டது

Posted On: 23 APR 2024 8:47PM by PIB Chennai

புவி தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுதில்லி ரஃபி மார்கில் உள்ள தலைமையக கட்டிடத்தில் நாட்டின் மிகப்பெரிய பருவநிலை கடிகாரம் இன்று நிறுவப்பட்டு இயங்கச் செய்யப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் நோக்கத்தை இந்த நிகழ்வு குறிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மும்பை ஐஐடியின் பேராசிரியரும், எரிசக்தி ஸ்வராஜ் அறக்கட்டளையின் நிறுவனருமான பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எரிசக்தி கல்வியறிவு பெற்றவராக இருக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று கூறினார். ஒவ்வொரு குடிமகனும் முடிந்தவரை எரிசக்தி பயன்பாட்டைத் தவிர்க்க அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018657

***

AD/IR/AG/RR



(Release ID: 2018728) Visitor Counter : 51