பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
லண்டனில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் பொதுச் சேவைகள் அமைப்பின் தலைவர்கள் / அமைச்சரவைச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்
Posted On:
24 APR 2024 12:41PM by PIB Chennai
அமைச்சரவைக் கூட்டத்திற்காக லண்டனில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 3-வது காமன்வெல்த் நாடுகளின் பொதுச் சேவைகள் பிரிவு தலைவர்கள், செயலாளர்கள் மாநாடு மார்ல்பரோ மாளிகையில் 2024, ஏப்ரல் 22 முதல் 24 வரை நடைபெற்றது.
இதில் மிகச் சிறந்த அரசுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்புக்கு காமன்வெல்த் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்தியப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறையின் விளக்கக் காட்சி இடம்பெற்றது.
"சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் அரசாங்கத்தை நிறுவனமயமாக்குதல்" இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். இது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 50 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்த இந்திய விளக்கக்காட்சி, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் அவர்களால் ஏப்ரல் 23, 2024 அன்று வழங்கப்பட்டது. உலகளாவிய சிறந்த நடைமுறையாக காமன்வெல்த் உறுப்பு நாடுகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. "சிபிஜிஆர்ஏஎஸ் ஓர் அதிநவீன குறை தீர்க்கும் அமைப்பு என்றும், ஸ்மார்ட் அரசின் சிறந்த நடைமுறையாகும் என்றும் காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி பாட்ரிசியா ஸ்காட்லாந்து கே.சி. தெரிவித்தார். இந்தியாவின் 1.4 பில்லியன் குடிமக்கள் பயனடைந்ததைப் போலவே காமன்வெல்த்தின் மீதமுள்ள 1.2 பில்லியன் குடிமக்களும் தொழில்நுட்ப தளத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயனடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்தமாநாட்டிற்கிடையே, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் காமன்வெல்த் செயலகத்தின் தலைமைச் செயலாளர் திருமதி பாட்ரிசியா ஸ்காட்லாந்து கே.சி. ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
***
(Release ID: 2018694)
SRI/SMB/RS/RR
(Release ID: 2018724)
Visitor Counter : 121