பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நியமனம்

Posted On: 19 APR 2024 9:20AM by PIB Chennai

கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது  பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை 2024 ஏப்ரல் 30 முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ஏப்ரல் 30, 2024 அன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

1964-ம் ஆண்டு மே 15-ல் பிறந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார். கடற்படை ஊழியர்களின் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மேற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் ஆக பணியாற்றினார்.

வினாஷ், கிர்ச், திரிசூல் ஆகிய இந்திய கடற்படை கப்பல்களின்   டி.கே.திரிபாதி கட்டளை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்மேற்கு கடற்படையின் செயல்பாட்டு அதிகாரி, கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர்; முதன்மை இயக்குநர் உட்பட பல்வேறு முக்கியமான செயல்பாட்டு மற்றும் பணியாளர் நியமனப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

ரியர் அட்மிரலாக, அவர் கடற்படை ஊழியர்களின் உதவித் தலைவர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரி கட்டளை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். வைஸ் அட்மிரல் பதவியில், எழிமலாவின் மதிப்புமிக்க இந்திய கடற்படை அகாடமியின் கமாண்டண்டாக அவர் பணியாற்றியுள்ளார்; கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்; மேற்கு கடற்படை கட்டளை பணியாளர் தலைவர் மற்றும் கொடி அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப், ஆகியவையும் அவர் வகித்த பதவிகளாகும்.

ரேவாவின் சைனிக் பள்ளி மற்றும் கடக்வாஸ்லாவின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, கரஞ்சாவில் உள்ள கடற்படை உயர் கட்டளை பாடநெறி மற்றும் அமெரிக்காவின் அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் கடற்படை கட்டளை கல்லூரி ஆகியவற்றிலும் அவர் படித்துள்ளார்.

***

ANU/PKV/KV

 


(Release ID: 2018235) Visitor Counter : 343