உள்துறை அமைச்சகம்
பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் இடம் பெற்றுள்ள நார்த் பிளாக்கில் லேசான தீ விபத்து, யாருக்கும் காயம் ஏற்படவில்லை
प्रविष्टि तिथि:
16 APR 2024 6:42PM by PIB Chennai
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் இடம் பெற்றுள்ள நார்த் பிளாக் அறை எண் 209-ல் 2024, ஏப்ரல் 16, அன்று காலை 09.15 மணியளவில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இங்குள்ள ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு அமைந்துள்ள அறையில், மின் சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. சிஐஎஸ்எஃப், உள்ளிட்ட தீயணைப்பு சேவைகளின் கூட்டு முயற்சியால் 20 நிமிடங்களுக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
கோப்புகள் எதுவும் சேதமடையவில்லை. சில தளவாடப் பொருட்கள் மற்றும் சில உபகரணங்கள் ஓரளவு சேதமடைந்தன.
-----
ANU/AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2018084)
आगंतुक पटल : 114