பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்ட்டபிள் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஆயுத சிஸ்டத்தை டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய ராணுவம் இணைந்து வெற்றிகரமாக சோதித்து பார்த்தன

Posted On: 14 APR 2024 10:38AM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வெளியில் எடுத்துச் செல்லத்தக்க டேங்க் எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை  ஆயுத சிஸ்டம்  தொழில்நுட்பத்தை உயர் மேன்மையுடன் நிரூபிக்கும் நோக்கத்துடன் பல்வேறு முறைகளில்  பல முறை கள மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு  லாஞ்சர், இலக்கைக் கண்டறியும் திறன் அமைப்புஃபயர் கட்டுப்பாட்டு அலகு  ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் முழுமையான செயல்பாட்டு திறனுக்கு ஏற்ப  போதுமான எண்ணிக்கையிலான ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 13, 2024 அன்று ராஜஸ்தானின் பொக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் இந்த ஏவுகணை  சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. ஏவுகணை செயல்திறன் மற்றும் போர்க்கருவிகளின் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக இருப்பது கண்டறியப்பட்டது.

இது நவீன  பிரதான போர் டாங்கியை தோற்கடிக்கும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சிஸ்டம் பகல்/இரவு மற்றும் மேல் தாக்குதல் திறனுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. டாங்கி போருக்கான ஏவுகணை திறனுக்கு இது ஒரு சிறந்த மதிப்பு கூடுதலாகும். இதன் மூலம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வெற்றிகரமான செயல்விளக்கம் முடிவடைந்து, இந்த அமைப்பு இப்போது இறுதி பயனர் மதிப்பீட்டு சோதனைகளுக்கு தயாராக உள்ளது, இது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.

 

இந்த சிஸ்டத்தின்  வெற்றிகரமான சோதனைகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய ராணுவத்தை பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பு வளர்ச்சியில் தற்சார்பை அடைவதற்கான முக்கியமான நடவடிக்கை இது என்று கூறினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் சோதனைகளுடன் தொடர்புடைய குழுக்களை வாழ்த்தினார்.

*******

SRI/PKV/DL

 


(Release ID: 2017889) Visitor Counter : 155