குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தனத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 APR 2024 5:41PM by PIB Chennai

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், நாட்டை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்த வருமான பாபாசாஹேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக மாற்றத்தின் முன்னோடியும், பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையுமான பாபாசாஹேப் அம்பேத்கர், சட்ட வல்லுநராகவும், கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். அவர் நமது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் மீதான அவரது வலுவான நம்பிக்கை இன்றும் நமது ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் அடித்தளமாக உள்ளது. டாக்டர் அம்பேத்கர் தமது வாழ்நாள் முழுவதையும் சமத்துவ சமுதாயத்தை நிறுவுவதற்காக அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகப் போராடினார்.

இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக கூட்டாகச் செயல்படுவோம்."

இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

**********

SRI/PLM/DL


(रिलीज़ आईडी: 2017854) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi