குடியரசுத் தலைவர் செயலகம்
வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, போயில போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
12 APR 2024 7:26PM by PIB Chennai
2024 ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் இந்த சிறப்பான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள் நமது பன்முக கலாச்சார பாரம்பரியத்தின் துடிப்பான வெளிப்பாடுகளாகும். இந்தப் பண்டிகைகள் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துகின்றன. சமூக நல்லிணக்கத்தின் அடையாளங்களாக விளங்கும் இந்தப் பண்டிகைகள் அனைத்தும், நமது வாழ்வில் புதிய சக்தியையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன. இந்தப் பண்டிகைகள் மூலம், நமது விவசாயிகளின் கடின உழைப்பை கௌரவிப்பதோடு, அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
இந்தப் பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும் அமைதியையும் கொண்டு வரட்டும்" இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.
---
ANU/AD/PLM/KPG/DL
(Release ID: 2017797)
Visitor Counter : 89