தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"டிஜிட்டல் தகவல்தொடர்பு துறையில் புதுமையான தொழில்நுட்பங்கள், சேவைகள், பயன்பாடுகள் மற்றும் வணிக மாதிரிகளை ஊக்குவித்தல்" குறித்த பரிந்துரைகளைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 12 APR 2024 4:52PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று "டிஜிட்டல் தகவல்தொடர்பு துறையில் ஒழுங்குமுறை  நடைமுறைகள் மூலம் புதுமையான தொழில்நுட்பங்கள், சேவைகள், பயன்பாட்டு வழக்குகள் மற்றும் வணிக மாதிரிகளை ஊக்குவித்தல்" குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.  5ஜி, 6ஜி, இயந்திர தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, பொருள்களின் இணையம் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்), மெய்நிகர் தோற்றத் தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் பிற அம்சங்களில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, புதிய தொழில்நுட்பங்களுக்கான சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதை நிவர்த்தி செய்ய, மத்திய தொலைத் தொடர்புத் துறை 2024 மார்ச் 10 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. அதில்  டிஜிட்டல் தகவல்தொடர்புத் துறையில் புதிய சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக மாதிரிகளுக்கான  ஒழுங்குமுறை கட்டமைப்பு தொடர்பான பரிந்துரைகளைத் தொலைத்தொடர்புத் துறை கோரியது.

தொலைத்தொடர்புத் துறையின் இந்த கடிதத்தைக் கருத்தில் கொண்டு, டிராய் ஜூன் 19 அன்று ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்றது. 

அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, 24 டிசம்பர் 2023 அன்று தொலைத்தொடர்புச் சட்டம்- 2023-ல் சில விதிகளை உருவாக்கியது. தற்போது தொலைத்தொடர்பு ஆணையம் தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது. அனைத்து அம்சங்களையும் இந்தப் பரிந்துரைகள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.

இந்த பரிந்துரைகள் டிராய் அமைப்பின் இணையதளமான www.trai.gov.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  ஏதேனும் விளக்கம் / தகவல்களுக்கு, டிராய் அமைப்பின் பிராட்பேண்ட் மற்றும் கொள்கை பகுப்பாய்வு ஆலோசகர்  திரு சஞ்சீவ் குமார் சர்மாவை +91-11-23236119 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

******************

ANU/AD/PLM/DL


(Release ID: 2017782) Visitor Counter : 81