குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஈத் உல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 10 APR 2024 7:13PM by PIB Chennai

ஈத் உல் ஃபிதுர் (ரம்ஜான்) பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"ஈத் உல் பிதுர் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பண்டிகை புனித ரமலான் மாதத்தில் நோன்பின் நிறைவைக் குறிக்கிறது. இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை நமக்கு வழங்குகிறது. இந்தப் பண்டிகை ஒற்றுமை, மன்னிப்பு, தொண்டு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களுடன் நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஈத் ஒரு சந்தர்ப்பமாகும். இந்தப் பண்டிகை அமைதியான வாழ்க்கையை வாழவும், சமூகத்தின் வளத்திற்காகப் பணியாற்றவும் நம்மை ஊக்குவிக்கிறது.

ஈத்-உல்-ஃபிதுர் பண்டிகையின் புனித சந்தர்ப்பத்தில், அன்பு, கருணை மற்றும் இரக்கம் போன்ற உணர்வுகளைப் பரப்புவோம்"

இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.                 

***

SRI/PLM/RS/DL


(Release ID: 2017646) Visitor Counter : 69